அஞ்சலி
**************************
தமிழர்களின்
தவிர்க்க முடியா
சுவாசம் நீ
ஆண்டாள் முதல்
ஆகாயம் வரை
எழுதி தீர்த்த
எழுத்தாணி நீ
எட்டா அறிவியலையும்
ஏட்டில் எளிமையாய்
ஏந்தி வந்த
எளிய விஞ்ஞானியே
உன்னிடம் எழுத பயின்றவர்கள்
இன்று பிரபலங்கள்.....
உன்னை பயின்றவர்கள்
என்றும் பிறர்க்கு பலன்களே
உன்
உரைநடை மூலம்
திரைக்கு வந்து
நாயகர்களின் நாயகனாய்
வீரு நடை ப்போட்ட
வீரன் நீ.
மரணபடுக்கையிலும்
'அப்போலோ தினங்கள்'
எழுதி,
உன் எழுத்துக்களுக்கு
சாகா வரம் தந்த
சாகசவாதி நீ
நீ
எழுத்தாளர்களின்
தங்க ப்பேனா
வாசகர்களின்
வசந்த காலம்
மொத்தத்தில்
தமிழர்களின்
பெருமிதம்
------ஆ. அருள் சோலை
No comments:
Post a Comment