Friday, January 4, 2008

நாங்களும் எழுதுவோம் - 3


என்று தணியும்
--------------------------------
அதிகாலை அலாரத்தை
அருவருப்பாய் அனைத்து
அவசரமாய் கடன் முடித்து
கடைமையாய் சமைத்து
கட்டிக் கொண்டு
கிளம்பும்போது நினைத்தேன்
இன்றாவது வீட்டுக்கு
மடல் எழுதிவிடவேண்டும்,

வழக்கமான டெம்போ பயணம்
பழக்கமான நண்பர்களுடன்,
கட்டிடப்பணி என்றும்
வாட்டிடும் பணி தான்.

கல்லாய் மணலாய்
இடர்ப்பட்டு,
சிமண்டாய் ஜல்லியாய்
குளைக்கப்பட்டு,
அலைக்கழிக்கும் போது,
இதம் தர
இடை வரும்
இதமான மதியஉணவு
இடைவேளை

பகல் உணவு
வேகமாய் உண்டால்தான்
பகல்த் தூக்கம்
சுகமாய் நீளப்படும்.

கனவுகள்
வகுப்பெடுக்க தொடங்கும் முன்
நினைவுகள் மணியடித்து
எழுப்பி விட,

மிச்சமிருந்த வேலைகள்
துச்சமாய் எனை பார்க்க
மீண்டும
மண்ணாகி கல்லாகி,
நீராய் இரைககப்பட்டு,
எச்சமாய் உமிழப்பட்டபோது
மிச்சமிருந்தது
மிஞ்ஞிய இரவுதான்.

பணி முடித்து,
பயணத்தை தொடங்கினோம்,
வழக்கமான டெம்போ பயணம்
பழக்கமான நண்பர்களுடன்,

வீட்டில் இன்று
வட்டில் நிறைவது
வழக்கமான
காலையின் மிச்ச உணவா?
அவசர சமையலா?
சாதத்துடன்
சமமாய் நீரும்
சங்கமமாகும்
சமத்துவ உணவா?

தெரியவில்லை...

வீடு புகுந்தும்
விட மறுத்தது
உடம்பு வலி.



கன நேரக் குளியலுக்கு
தினம் நடக்கும் மறியல்
உடைக்குவியலில்
உரியவர் உடையெடுக்கும்
உச்சக்கட்டப் போராட்டம்,


இவையெல்லாம் கடந்து
அவையில் அமர்ந்து

சமத்துவ உணவை
சமமாய் பகிர்ந்து
சாப்பிடும் போது
ஆகி விட்டது பத்து.


சாதத்தை உண்டு
சகலத்தையும் ஜீரணித்தோம்.


உண்டப் பின்
ஒலியின் அலைவரிசையில்
ஒன்றாகும் போதுதான்,
ஒளிந்திருந்த நினைவுகள்
ஒளிப்பெற்றன.



"இன்றாவது வீட்டுக்கு
மடல் எழுதிவிடவேண்டும்",


மடல் எடுக்க
உடல் மறுக்க,
ஊடல் வலுக்க,


இறுதியாய் தூக்கம்
உறுதி செய்யப்படுகிறது.


மடலும் நானும்
வெறுமையாய் ,,,,,,


உறங்கிப்போனோம்.

அதிகாலை அலாரத்தை
அருவருப்பாய் அனைத்து
அவசரமாய் கடன் முடித்து
கடைமையாய் சமைத்து
கட்டிக் கொண்டு
கிளம்பும்போது நினைத்தேன்
இன்றாவது வீட்டுக்கு
மடல் எழுதிவிடவேண்டும் ,,,,,,,,

------------------ஆ.அருள் சோலை


இந்த உணர்வு வெளிப்பாட்டுக்கு காரணம் கிழேயுள்ள இந்த செய்தியும் வலைத்தளமும் தான்.....தன்னை இழந்து தங்கள் குடும்பத்தை சுமக்கும்
என் அன்பு இந்திய சகோதரர்களுக்கு என் அர்ப்பணிப்பு


Mission News
http://www.scem.info/site/index.php?option=com_content&task=view&id=49&Itemid=35
Indian Migrant Construction Workers in Singapore and the Christian Response

Introduction

One fourth of the Singaporean population are foreigners. Recently, the Department of Statistics said that the growth of the foreigner population has been many times faster than that of the growth of the local population. Talented foreign talents are always welcomed in Singapore. They enjoy extra privileges. But not so the migrant construction workers.The private and public construction projects have been multiplied many times creating the demand for more manual workers. The labor market operates in South India, Thailand, mainland China, Bangladesh, Sri Lanka and a few from Malaysia. Comparatively, the Indian worker is one of the cheapest in the labor market, the major requirement of any contractor in Singapore.

Indian Migrants

An estimated 200 000 foreign construction workers are in Singapore. Out of these 200 000 workers, 30 000 of them are from India. Most of the foreign Indian construction workers come from Tamil Nadu, India. All are male and age between 20 and 30. They come to Singapore with one- or two year work permit to work at construction sites.
The plight and woes of the Indian WorkerThe Indian worker pays 150 000 to 200 000 rupees to Indian agents to come to Singapore. “Mr Karuppiah, one of the Indian construction workers said the workers arrived in Singapore six months ago, paying about S$6000 for their trips from Madras”. Each worker pays S$6,000 to S$8,000 to secure a job here. Their daily wages range from S$12 to maximum S$20. Most of them borrowed money from loan agents in India to come to Singapore. Sometimes these workers are treated badly. Their dreams are shattered when they face the reality here. Some time ago, there was an article in the Singapore Strait Times titled “Slave on the run”. It is hard to believe that these things can happen in modern urban Singapore. But it is real.

Indian national V.Supramanian borrowed $6,000 for his passage here, believing that he would get a job. But he ended up being on the run and sleeping in corridors, walkways and open areas. “I was treated worse than a slave. They put me in a shophouse, with 30 other men. They fed us curry gravy and rice. Sometimes, they forgot our meals.” To add insult to injury, the agent took $100 out of his $450 a month salary as commission for helping him find a job here. ……nine months later his agent disappeared. Subramanian was kicked out of the shophouse he was staying in as the agent had also stopped paying the rent. Now he is homeless and takes on odd jobs such as cleaning coffeeshops or rubbish dumps for $5 to $10 a day. “I move about because there are a lot of policemen…But I would still rather live on the streets as in illegal than go back to India. If I went back, everyone would go after me…my family, the moneylenders…I miss my family but I’d rather stay here than go back and get killed”. Life in Singapore is lonely, and with hard work and pressure to repay their loans, many resort to alcoholism, prostitution and gambling. Indeed they are trapped in a vicious cycle.

http://www.scem.info/site/index.php?option=com_content&task=view&id=49&Itemid=35

3 comments:

lankii said...

We feel it too...

lankii said...

Nenju porukuthu illayea ithai ninnaithu ninaithu manam verukuthuillayae..Above article make me to recall mahakavi Bhaarathi song.. lankii/tf1

lankii said...

உண்ட(ப்) பின்
ஒலியின் அலைவரிசையில்
ஒன்றாகும் போதுதான்,
ஒளிந்திருந்த நினைவுகள்
ஒளிப்பெற்றன.
.....
மடலும் நானும்
வெறுமையாய் ,,,,,,
....
உச்ச(க்)கட்டப் போராட்டம்
....
தரணி ஆண்டவன் திரனியற்ற அரசியல்வாதிகளால் படும் அவதி... கண்முன் காட்சியாக... உள்ளத்தில் உருத்தலாக...சில தமிழ் திருத்தங்கல் செய்துகொண்டு படித்தல் நலம்.....கவிஞரின் சமூகப் பார்வை தனிச்சிறப்பு....