பெனாசிர் படுகொலையால் நடந்த வன்முறையில் பாகிஸ்தான் ரெயில்வேக்கு ரூ.800 கோடி சேதம்
பாகிஸ்தானில் முன்னாள் பிரதமர் பெனாசிர் சுட்டுக்கொல்லப்பட்டதால் வன்முறை சம்பவங்கள் நடந்தன. இதில், ரெயில்வே துறைக்கு பெருத்த சேதம் ஏற்பட்டு இருக்கிறது. 22 ரெயில் என்ஜின்கள், 140 ரெயில் பெட்டிகள் முழுமையாக எரிக்கப்பட்டன. மேலும், ரெயில்வே சொத்துக்கள் அழிக்கப்பட்டன. இதன்படி பாகிஸ்தான் ரெயில்வே துறைக்கு மட்டும் ரூ.800 கோடி அளவுக்கு சேதம் ஏற்பட்டு இருப்பதாக, காபந்து அரசின் பிரதமர் முகமதியன் சோம்ரோ தெரிவித்தார்.
அவர் மேலும் கூறுகையில், “ரெயில்வேத்துறை ஏற்கனவே மிகுந்த நஷ்டத்தில் இயங்குகிறது. இப்போது மேலும் அதிகமான நஷ்டத்தை ஏற்க வேண்டியது இருக்கிறது” என்றார்.
Pakistani PM says that due to the violence attack, after Benasir Bhutto's assassination Pakistan Railways has lost around Rs.800 crores loss. 22 rail engines, 140 train compartments ahs fully burnt in violence. He expressed his sadness saying that Pakistan Railways already running in loss, and now it has became worser.
Our comment : Can Lalu help out..??
No comments:
Post a Comment