மண்ணை பிரிந்த காதல்
-------------------------------
தினம் உதிக்கும்
ஞாயிறு,
ஞாயிறும் உதிக்கும்
உன் நினைவுகளோடு,
ஞாயிறை தொடர்ந்து
திங்களும்
திகட்டாது
திளைக்க வைக்கும்
உன் பரிவுகளுடன் ,
பின் வரும்
செவ்வாயும் உன்
செவ்விதழை
செம்மையாய்
நினைவு கூறும் ,
பிறகு
புதனும்
இதம் தரும்
இதமான உன்
வாதம் கொண்டு,
என்னை
வியாழனும்
விசிறி விடும்
உன் விழியின்
துணையோடு,
வெள்ளியும்
அள்ளி வர மறக்காது
அந்த வெண்கல சிரிப்பை ,
இனி வரும்
சனியும்
சளிக்காது கொடுக்கும்
உன்
சங்கீத கெஞ்சல்களை,
உன்னை
நான் பிரிந்தாலும்
உன் நினைவுகள்
என்றும்
என்னோடுதான்,
வார நாட்கள்
ஆறுதல் தந்தாலும்
வாரம் வாரம்
பெரும் பாரம் தான்
நீ இல்லாமல்,
சேரும் நாள்
வரும் வரை
சோராமல்
காத்திருப்போம்
-------------ஆ.அருள் சோலை
No comments:
Post a Comment