Tuesday, April 8, 2008

தாய்நாடு - News from India



சேது கால்வாயில் கப்பல் சோதனை ஓட்டம்: டி.ஆர்.பாலு









சேது சமுத்திரக் கால்வாயில் இன்னும் இரு தினங்களில் கப்பல் சோதனை ஓட்டம் விடப்படும் என்று மத்திய அமை‌ச்‌ச‌ர் டி.ஆர்.பாலு தெரிவித்துள்ளார்.

சென்னையில், ஆவடி அ‌ண்ணா ‌சிலை அருகே நட‌ந்த திமுக அரசின் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்ட‌ம் நடந்தது. இ‌தி‌‌ல் கலந்துகொண்டு மத்திய அமை‌‌ச்ச‌ர் டி.ஆர்.பாலு பேசியதாவது:சேது சமுத்திர திட்டத்தை 6வது வழித்தடத்தில் செயல்படுத்த, முந்தைய பாரதிய ஜனதா அரசுதான் அனுமதி வழங்கியது. அதன்பின்னர் 2005ம் ஆண்டு ஜுலை மாதம் 2ம் தேதி பிரதமர் மன்மோகன் சிங், சேது சமுத்திர திட்டத்தை தொடங்கி வைத்தார்.அப்போது எதிர்ப்பு தெரிவிக்காதவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு பின்னர் இந்த திட்டத்தை எதிர்த்து உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். அதன்படி, ராமர்பாலம் இருந்ததாக சொல்லப்படும் இடத்தை தவிர மற்றப்பகுதிகள் ஆழப்படுத்தப்பட்டு வருகிறது.

இந்த திட்டத்துக்காக கடலுக்குள் எத்தனை அடி ஆழம் தோண்டப்பட்டுள்ளது என்பது குறித்து வரும் 15ம் தேதி உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்ய வேண்டும். அதற்காக, இன்னும் இரு தினங்களுக்குள் சேது சமுத்திர கால்வாயில் கப்பல் சோதனை ஓட்டம் விடப்படவுள்ளது. 100 ஆண்டு கனவு திட்டமான சேது சமுத்திர திட்டம் நிச்சயம் நிறைவேற்றப்படும்.

உச்ச நீதிமன்ற தீர்ப்பும் இந்த திட்டத்துக்கு சாதகமாக அமையும். இவ்வாறு அவர் கூறினார்.





கர்நாடகத்திற்கு மீண்டும் பஸ் போக்குவரத்து துவங்கியது



பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் இதர நகரங்களுக்கு தமிழகத்திலிருந்து இன்று முதல் மீண்டும் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது.ஒகேனக்கல் பிரச்சனை வெடித்ததையடுத்து கர்நாடகாவில் தமிழ் சினிமா திரையிடப்பட்ட தியேட்டர்கள் தாக்கப்பட்டன.தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு சென்ற அரசு பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

பெங்களூர் மற்றும் கர்நாடகாவின் இதர நகரங்களுக்கு
தமிழகத்திலிருந்து இன்று முதல் மீண்டும் அரசு பஸ் போக்குவரத்து தொடங்கியது.ஒகேனக்கல் பிரச்சனை வெடித்ததையடுத்து கர்நாடகாவில் தமிழ் சினிமா திரையிடப்பட்ட தியேட்டர்கள் தாக்கப்பட்டன.தமிழகத்திலிருந்து கர்நாடகாவுக்கு சென்ற அரசு பேருந்துகளும் அடித்து நொறுக்கப்பட்டன.

இதற்கு பதிலடியாக தமிழகத்திலும் கர்நாடக பேருந்துகள் தாக்கப்பட்டன. சென்னையில் கன்னட ஓட்டல்கள் அடித்து நொறுக்கப்பட்டன. ஓசூரில் நடந்த முழுஅடைப்பின்போது கர்நாடக அரசுப் பேருந்துகள் தீவைத்து கொளுத்தப்பட்டன.இரு மாநிலங்களிலும் நிலவிய இந்த பதட்டம் காரணமாக தமிழக அரசு பேருந்துகள் கர்நாடகாவுக்குசெல்வது நிறுத்தப்பட்டது.அதேபோன்று கர்நாடகா அரசு பேருந்துகளும் தமிழகத்திற்கு வருவது நிறுத்தப்பட்டன.

இந்நிலையில் , கர்நாடகாவில் சட்டசபை தேர்தல் முடியும்வரை அமைதி காப்போம் என தமிழக முதலமைச்சர் கருணாநிதி அறிவித்ததை தொடர்ந்து இரு மாநிலங்களிலும் பதட்டம் தணிந்துள்ளது.போராட்ட களமாக மாறியிருந்த இரு மாநில எல்லைப் பகுதிகளிலும் அமைதி திரும்பியுள்ளது.

இந்நிலையில், ஈரோடு மாவட்டத்திலிருந்து தமிழக அரசு பேருந்துகள் கர்நாடகா செல்ல இன்று கர்நாடகா போலீசார் அனுமதி வழங்கினர். இதனையடுத்து தமிழக அரசு பேருந்துகள் இன்று காலை முதல் கர்நாடக மாநிலத்துக்கு செல்லத் துவங்கின.அதேபோன்று மறுமார்க்கத்தில் கர்நாடக எல்லைப் பகுதியிலிருந்தும் அம்மாநில அரசுப் பேருந்துகள் தமிழகம் வரத்துப்வங்கியுள்ளன.நாளை முதல் முழு எண்ணிக்கையில் இரு மாநில பேருந்துகளும் இயக்கப்படும் என தெரிகிறது.


(மூலம் - வெப்துனியா)








ஐ.டி.யில் தமிழகத்தின் பங்களிப்பு 25% ஆக உயரும் : கருணாநிதி

சென்னை (ஏஜென்சி), புதன்கிழமை, 9 ஏப்ரல் 2008 ( 08:47 IST )


இந்தியாவின் தகவல் தொடர்புத் துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 25 சதவிகிதமாக உயரும் என்று முதல்வர் கருணாநிதி நம்பிக்கை தெரிவித்தார்.

சென்னை - தரமணியில் இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்காவின் புதிய கட்டடம், தமிழ்நாடு தகவல் தொடர்பு மற்றும் தொழில்நுட்பவியல் மையம், தமிழ்நாடு மாநில தரவு மையம், தமிழ்நாடு பெரும் பரப்பு வலையமைப்பு மையம், பொது சேவை மையத் திட்டம், ராயப்பேட்டை மருத்துவமனையில் தொலை - மருத்துவ வசதி ஆகியவற்றை முதல்வர் கருணாநிதி நேற்று திறந்துவைத்தார்.

அப்போது அவர் பேசுகையில், "தொலை தொடர்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாடு, மென்பொருள், வன்பொருள், தகவல் தொழில்நுட்பம் சார்ந்த சேவைத் தொழில் ஆகியவற்றில் தமிழகம் இன்று முன்னிலை வகிக்கிறது." என்றார். ஒட்டுமொத்த இந்தியாவிலும் உள்ள தகவல் தொடர்புத் துறை உற்பத்தியில் தமிழகத்தின் பங்களிப்பு 11 சதவிகிதம் என்ற அவர், "2011-ம் ஆண்டில் இந்தப் பங்களிப்பை 25 சதவிகிதமாக மாற்ற வேண்டும் என்பதுதான் இந்த அரசின் நோக்கமாகும். தமிழகத்தில் 2005-06-ம் ஆண்டில் ரூ.14 ஆயிரத்து 400 கோடி மதிப்பில் இருந்த மென்பொருள் ஏற்றுமதி வர்த்தகம், 2006-07-ம் ஆண்டில் ரூ.20 ஆயிரத்து 700 கோடியாகவும், 2007-08-ல் ரூ.26 ஆயிரம் கோடியாகவும் உயர்ந்துள்ளது" என்று தெரிவித்தார்.

இந்திய மென்பொருள் தொழில்நுட்பப் பூங்கா சென்னையில் அமைந்ததன் மூலம் தமிழகம் இத்துறையில் முன்னணிக்குச் செல்லும் என்ற அவர், "இதுபோன்ற வசதிகளுடன் கோவை, மதுரை, திருச்சி, சேலம், நெல்லை, ஓசூர், வேலூர் பகுதிகளில் தகவல் தொழில்நுட்பப் பொருளாதார மண்டலங்கள் விரைவில் அமைக்கப்படும்" என்றார்.

தகவல் தொழில்நுட்ப புரட்சியின் பயனை கிராம மக்களுக்கும், ஏழைகளுக்கும் அளிக்க வேண்டும் என்பதன் முதல்கட்டம்தான் தமிழ்நாடு பெரும் பரப்பு வலையமைப்புத் திட்டமும், தமிழ்நாடு மாநில தரவு மையத் திட்டமும் என்ற முதல்வர், "பொது சேவை மையத் திட்டத்தை சிறப்பாகச் செயல்படுத்தும் மாநிலங்களில் தமிழகமும் ஒன்று. 5 ஆயிரத்து 440 பொது சேவை மையங்கள் மாநிலம் முழுவதும் அமைக்கப்பட உள்ளன.
முதல்கட்டமாக பெரம்பலூர், அரியலூர், திருவண்ணாமலை மாவட்டங்களில் மூன்று மையங்களைத் தொடங்கி வைத்துள்ளேன்" என்று தெரிவித்தார்.


(மூலம் - வெப்துனியா)

No comments: